பணத்திற்காய் பழகி
பாதியிலே கழட்டிவிட்டு
புரிதல் இல்லை
பிரிகின்றோம் என்று சொல்ல
காதல் இல்லை இது
"நட்பு "
பாசம் என்னும் வேஷம் காட்டி
பந்தாவாக வாழ பழக்கி
வேஷம் தெளியும் நேரம் வர
விட்டு செல்லும் உறவுகள் இல்லை இது
" நட்பு"
சாதிஎனும் பிரிவினை காட்டி
மதம் எனும் வெறியை ஊட்டி
சாக்கடையில் தள்ளி விடும்
சுற்றம் இல்லை
இது
" நட்பு "
பணம் பகட்டு தேவை இல்லை
பட்டம் பதவி தேவை இல்லை
பாசம் வேஷம் இங்கு இல்லை
சாதி மதமும் நினைவில் இல்லை
இருப்பதெல்லாம் ஒன்றே தான்
இறப்பிலும் இருப்போம் ஒன்றாய் தான்
நட்பே கற்பு என்றாகும்
நாளும் இதுவே நிலையாகும் .
0 comments:
Post a Comment